July 2017

மலையாள நடிகர் நிவின்பாலி, ‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர். இவர் தற்போது தமிழில் ‘ரிச்சி’ படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது.
அடுத்து இவர் நடிக்கும் ‘ஹே ஜூட்’ என்ற மலையாள படத்தில் திரிஷாவுடன் ஜோடி சேருகிறார். இந்த படத்தை ஷியாம் பிரசாத் இயக்குகிறார். இதை தொடர்ந்து ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற மலையாள படத்தில் நிவின் பாலி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை தியான் சீனிவாசன் இயக்குகிறார்.
திரிஷாவுடன் நிவின்பாலி நடிக்கும் ‘ஹேஷூட்’ படம் கடந்த வாரம் தொடங்கியது. நயன்தாராவுடன் ஜோடி சேரும் ‘லவ்ஆக்‌ஷன் டிராமா’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகிறது.
தென் இந்திய பிரபல நாயகிகளுடன் நிவின்பாலி ஒரே நேரத்தில் ஜோடி சேர்ந்து நடிப்பது, முன்னணி நாயகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் தற்போது மலையாளத்தில் அனைவராலும் பாராட்டப்படும் நிவின்பாலியுடன் இவர்கள் நடிப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.




பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் எல்லோரும் நடிக்கும் போது, கலாச்சாரம் சீரழியவில்லையா? என நடிகர் கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்திய மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தது.  
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கமல் பேசியது; சட்டத்தின் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கிறது. அந்த சட்டம் என்னை பாதுகாக்கும் என நம்புகிறேன். என்னை கைது செய்யச் சொல்லும் அந்த கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒருவேளை, நான் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை தவிர்க்க மாட்டேன், சட்டப்படி அதனை சமாளிப்பேன். 
பிக்பாஸ் கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் எல்லோரும் நடிக்கும் போது, கலாச்சாரம் சீரழியவில்லையா? அப்போது ஏன் எந்த நடவடிக்கையையும் எடுக்க சொல்லவில்லை? அதில் கெட்டு போகாத கலாச்சாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கெட்டு போகிறதா? ஹிந்தி, கன்னட மொழில் கூட பிக்பாஸ் நடந்தது. ஒருவேளை ஹிந்தி, கன்னடம் தெரியாததால் பிக்பாஸ் நிகழ்ச்சி புரியாமல் இருந்திருக்கும் போல. "சேரி பிஹேவியர்"  என்று காயத்ரி ரகுராம் கூறியதற்கு நான் பொறுப்பல்ல அது அவர் சொன்னது. அப்படி சொல்ல நான் எழுதிக் கொடுக்கவில்லை.
என்னை நம்பும் என் மக்களுக்கு நல்ல விருந்தளிக்க கடமைபட்டிருக்கிறேன், மற்றவர்களுக்கு அல்ல. இவர்களும், ஒருவகையில் எனக்கு வேண்டப்பட்டவர்கள் தான். எதனால் என்றால் தசாவதாரம் வெளியானபோது என்னை அவர்கள் கொண்டாடினார்கள். 
ஆனால், விஸ்வரூபம் வந்ததும் எதிர்த்தார்கள். அதற்காக, நான் எனது வேலையை செய்யாமல் இருக்க முடியுமா? இந்த எதிர்ப்பையெல்லாம் பார்த்தால் ஒன்றுமே செய்ய முடியாது. விருமாண்டி (சண்டியர்) படத்தின் பெயரை மாற்றச் சொல்லி பெரிய தொல்லை கொடுத்தார்கள். அதையும் சமாளித்தேன். அதன் பிறகு அதே அரசு இருந்த சமயத்தில், அதே தலைப்பில் வேறொரு படம் வெளியானது. இதை யாரும் தட்டிக் கேட்கவில்லை. ஏன், மக்கள் கூட கேட்கவில்லை. என தனது தரப்பு நியாயத்தையும் கூறியுள்ளார்.
சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான 2 வாக்குப்பெட்டிகள் விமானத்தில் சென்னை கொண்டு வரப்படுகின்றன. தேர்தலுக்கான உபகரணங்களும் இன்றிரவு 8 மணிக்கு விமானத்தில் கொண்டு வரப்பட உள்ளன.
சென்னை : சுதாகரன்,பாஸ்கரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆஜராகாததால் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.