July 2018


தருமபுரி; தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. விடாது பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,600 கன அடியாக வந்துகொண்டிருந்த தண்ணீரின் அளவு, படிப்படியாக அதிகரித்து 2 மணி நிலவரப்படி 21,000 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டு்ள்ளது.

கலிபோர்னியா: சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் 7 புதிய கோள்கள் இருப்பதாக நாசா முன்னர் அறிவித்திருந்தது. சூரிய குடும்பத்தை போன்று இக்கோள்களும் பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இந்த குடும்பத்திற்கு கெப்ளர் 90 என பெயரிடப்பட்டது. இந்நிலையில், அக்குடும்பத்தில் 8வது கோள் நாசாவின் கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்கோப் மற்றும் அமெரிக்க விண்வெளி கழகத்தின் செயற்கை நுண்ணறிவு முறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள் பூமியை போன்று 30 சதவீதம் அதிக எடையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது சூரிய குடும்பத்தை போன்று, ஒரு நட்சத்திரத்தை மையமாக கொண்டு சுற்றி வரும் பல கோள்கள் அடங்கிய மண்டலம் உள்ளது. ஏராளமான கோள்களை கொண்ட இந்த மண்டலத்தில் எதுவும் உயிரினங்கள் வாழ ஏற்றதாக இல்லை. இருப்பினும் இவற்றில் 8 கோள்கள் பூமியைப் போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளன. இந்த கோள்களின் மையமாக விளங்கும் நட்சத்திரம் கெப்ளர் 90 என அழைக்கப்படுகிறது. இது 2545 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கெப்ளர் 90 நட்சத்திர மண்டலம், மினி சூரிய குடும்பம் போன்றே காணப்படுகிறது. 

கோள்கள் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக காணப்படும் இந்த நட்சத்திர மண்டலத்தில் சிறிய அளவிலான கோள்கள் உள் பகுதியிலும், பெரிய கோள்கள் வெளி பகுதியிலும், நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கெப்ளர் 90ஐ என்ற கோள், பூமியை போன்றே இருந்தாலும், இது நட்சத்திரத்தை ஒருமுறை சுற்றி வர 14.4 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இதன் பரப்பளவு மிகுந்த வெப்பம் நிறைந்ததாக இருக்கலாம். தோராயமாக 426 செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கலாம். செவ்வாய் கிரகத்தை விட இது வெப்பம் நிறைந்ததாக இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.



சில்வர்ஸ்டோன்: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வரவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லண்டனில் விஜய் மல்லையா பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர் தமது சொத்துக்கள் குறித்த பிரமாண பத்திரத்தை லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாக கூறினார். ஆனால் எனது வீடு என் மகன் பெயரிலும், லண்டனில் இருக்கும் வீடு என் அம்மாவின் பெயரிலும்தான் உள்ளது. அதை சட்டப்படி பறிமுதல் செய்ய முடியாது என்றார். எனது பெயரில் சில கார்களும், கொஞ்சம் நகைகளும்தான் உள்ளன. அதை அவர்கள் எப்போது கேட்டாலும் தர தயாராக உள்ளதாக கூறினார். மேலும் பேசிய மல்லையா, தாம் எப்போதும் இங்கிலாந்து நாட்டின் குடிமகன்தான். இந்தியக் குடிமகன் இல்லை. அப்படி இருக்கயில் கடன் வாங்கி நான் நாட்டை விட்டு ஓடியதாக எப்படிக் கூறமுடியும் என வினவி இது அனைத்தும் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது என சாடியுள்ளார். இந்தியாவில் தற்போது தேர்தல் சீசன் களைகட்டியுள்ளதால் என்னை இந்தியா கொண்டு சென்று சிலுவையில் அறைந்து வாக்குகளை அறுவடை செய்யப் பார்க்கிறார்கள். அதற்காக தான் நான் அவர்களுக்கு தேவைப்படுகிறேன் போல என்றார்.






சென்னை: டெண்டர் முறைகேடு உள்ளிட்ட பல புகார்களை விசாரிக்க முடியாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார். லோக் ஆயுக்தா கொண்டு வருவதில்  திமுகவுக்கு மகிழ்ச்சி, ஆனால் இதில் டெண்டர் முறைகேடு, உள்ளாட்சி அமைப்புகள் மீதான புகார் உள்ளிட்ட பல புகார்களை விசாரிக்க முடியாத  வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதி  ஒருவரை சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். மற்ற மாநிலங்களில் முதல்வரை விசாரிக்கலாம் என தெளிவாக உள்ளது. இந்த மசோதாவில்  அமைச்சர்கள் என குறிப்பிட்டு முதல்வரையும் சேர்த்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்கள் குறித்து இந்த அமைப்பில் முறையிட முடியாது  என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.  மசோதாவில் திருத்தமுள்ளதால் தேர்வுக்குழுவுக்கு  அனுப்பி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என திமுக சார்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டது என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் லோக்  ஆயுக்தா வரம்புக்குள் வருவார்கள். எத்தகைய பதவியில் இருந்தாலும் யாரிடமும் அனுமதி பெறாமல் விசாரிக்கப்படுவார்கள். எவராயினும் சட்டத்துக்கு  முன் சமம். லோக் ஆயுக்தாவின் தலைவரே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார். இதனையடுத்து திமுக  உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். திமுக வெளிநடப்பு செய்த நிலையில் சபாநாயகர் மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு விட்டார்.  உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் ராமசாமி போட்டி:
வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராமசாமி, லோக் ஆயுக்தா மசோதா வெளிப்படையாக இல்லை என்றும்  மசோதாவை ஏற்றுகொண்டாலும் குறைகளை களைய வேண்டும் என்று தெரிவித்தார்.


புதுடில்லி : ''டில்லி அரசிடம், போலீஸ் துறைக்கான அதிகாரம் இல்லாத போது, குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த, அந்த அரசு உத்தரவிட முடியாது; அது குறித்த விசாரணை குழு அமைக்கவும் அதிகாரம் கிடையாது,'' என, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, துணைநிலை கவர்னர் ஆகிய இருவரில், யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளில், கவர்னர் தலையிட முடியாது' என கூறியது.



நிலம், காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு குறித்த விவகாரங்களை கையாளும் அதிகாரம், துணைநிலை கவர்னரிடம் இருப்பதாக, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதையடுத்து, துணைநிலை கவர்னரின் அதிகாரம் ஒடுக்கப்பட்டுள்ளதாக,

ஆம் ஆத்மி தலைவர்கள் கருத்து தெரிவித்ததுடன், தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். 

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி, 'பேஸ்புக்' பக்கத்தில் எழுதியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தை நிர்வகிக்க தேவையான காவல் துறை நிர்வாகம், துணைநிலை கவர்னர் கையில் உள்ளது.

நிலம், சட்டம் - - ஒழுங்கு உள்ளிட்டவற்றிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலையிட முடியாது. இது குறித்து, எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கவோ, உத்தரவுகளை பிறப்பிக்கவோ முடியாது. போலீஸ் துறையை நிர்வகிக்கும் அதிகாரம் இல்லாத போது, குற்றச் சம்பவங்கள், ஊழல்கள் குறித்து விசாரிக்கவோ, அது குறித்த விசாரணை குழுவை அமைக்கவோ, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கிடையாது. 

இதற்கு முன், அரசால் அமைக்கப்பட்ட விசாரணை குழுக்கள் அனைத்தும் செல்லாதவையே. 'டில்லி அரசு, மற்ற மாநில அரசுகளுடன் தன்னை ஒப்பிட்டு பார்க்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏனெனில் அது, யூனியன் பிரதேசம் என்ற வரையறைக்குள் வருகிறது; மாநிலங்களுக்கான அதிகாரம், அதற்கு கிடையாது. இவ்வாறு அவர் எழுதியுள்ளார்
வைர விழா நாயகன் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் தமிழ் மொழிக்காகவும், தமிழக அரசியலிலும் பெரும் தொண்டாற்றிய மூத்த தலைவர். இவரது எழுத்து எவ்வளவு வலிமையானது என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அறிவர். அனைத்து தரப்பட்ட மக்களின் வாழ்விலும் கடைபிடிக்கும் வகையில் கலைஞர் அவர்கள் உரைத்த முத்தான 25 பொன்மொழிகள்... 





1 "தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை." 




2 "உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்." 




3 "தோழமையின் உயிர்த்துடிப்பே, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது." 





4 "குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்... கூர்வாளைக் கூர்வாளால் சந்திக்க வேண்டும்." 





5 "மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது"





6 "புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்... உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்." 





7 "வாழும் போது மனிதர்களைப் பிரித்துவைக்கும் சாதிவெறி, அவர்கள் இறந்த பிறகாவது தணிந்துவிடுகிறதா?" 





8 "மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைத்தனமோ; அதைப் போன்றுதான் கெஞ்சினால் மிஞ்சிகிற வீரமும் ஆகும்." 



9 "உண்மையானவனின் பின்னால் ஐந்து பேர் செல்வார்கள்... அந்த உண்மையைப் புரியாதவன் பின்னாலும் ஐந்து பேர் செல்வார்கள்." 




10 "இழிவு செய்யும் நண்பர்களை விட, எதிர்த்து நிற்கும் பகைவர் எவ்வளவோ மேல்!" 



11 "பதவி என்பது முள்கிரீடம் போன்றது!" 



12 "அனுபவம் ஒரு பள்ளிக்கூடம்... ஆனால், அதில் ஆணவக்காரர்கள் கற்றுத் தேர்வதில்லை." 



13 'முடியுமா நம்மால்' என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது வெற்றிக்கான தொடக்கம். 



14 "அணு அளவுகூட இதயமிலாத ஒருவருக்கு ஆகாயம் அளவு மூளையிருந்து என்ன பயன்?" 




15 "ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை, அவர் இறந்துபோன நாளில் கணக்கிடத் தெரிந்துகொள்ளலாம்." 



16 "தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை." 



17 "ஆசைகள் சிறகு ஆகலாம்; அதற்காக கால்களை இழந்துவிட்டு பறந்தால் பூமிக்கு திரும்ப முடியாது." 




18 "அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது." 




19 "அதிருப்தியாளர்கள் வளரவளர அவர்களின் மத்தியிலே அவர்களை நடத்தி செல்லும் தலைவன் ஒருவன் தொன்றிவிடுவான்." 



20 "தான் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் போது தன் மக்களின் முகம் சுண்டக் கூடாது என்பதில் குறியாக இருப்பது தாய்க் குணம்." 




21 "தவறு செய்ய ஆரம்பிக்கிறவனுக்கு அஸ்திவாரத்திலே ஏற்படுவதை விட, அதிக அச்சம் உச்சி போய் சேரும் போது தான் தோன்றுகிறது." 






22 "பழியுணர்வு மட்டுமே வாழ்க்கை எனக் கொண்டவர்கள், பகைவர் முயற்சியில்லாமலேயே தமக்கு தாமே குழி வெட்டிக் கொள்வார்கள்." 



23 "சிரிக்க தெரிந்த மனிதன் தான் உலகத்தின் மனித தன்மைகளை உணர்ந்தவன்." 




24 "கண்ணீரில் மலரும் காதல், சேற்றில் மலரும் செந்தாமரையாகக் காட்சி தருவதும் உண்டு." 




25 "துணிவிருந்தால் துக்கமில்லை... துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை..."


மீனவர்களின் நலனுக்காக வேறு எந்த ஆட்சியிலும் செயல்படுத்தப்படாத எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1) மீன்வளர்ச்சிக் கழகம் அமைத்தது, மீனவர் நல வாரியம் அமைத்து ரூ. 4.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது

2) விபத்து மரண இழப்பீட்டுத் தொகையை ரூ. ஒரு லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தியது
3) கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் அறிவித்தது

4) மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கியது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.
5)காணாமல்போன மீனவர்களின் குடும்பத்துக்கு தினசரி உதவித் தொகை வழங்கும் திட்டம்
6) மீன்பிடி படகுகளுக்கு டீசல் மானியம் அறிவித்தது
7) மீனவர்களுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டம் அறிவித்தது
8) சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் ரூ. 80 கோடி கடனை தள்ளுபடி செய்தது
9)சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு மட்டும்தான் அதிமுக ஆட்சியில் வெளியானது. ஆனால், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த திமுகதான் சுமார் 30 ஆயிரம் சுனாமி வீடுகள் கட்டும் பணியை நிறைவேற்றியது.
10) சுனாமியால் பாதிக்கப்பட்ட படகுகளை சீரமைக்கத் திட்டம் அறிவித்ததும் திமுக ஆட்சியில்தான்.
11)மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கும் திட்டம் திமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு, பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு கோபுரங்களைப் பயன்படுத்த ஒப்பந்தம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றன. அந்த நேரத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர், ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, தொலைத்தொடர்பு கோபுரப் பயன்பாட்டுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல், வாக்கி டாக்கிகளை கொள்முதல் செய்து, ஊழல் செய்துள்ளது. இதன் காரணமாகத்தான் மீனவர்களுக்கான வாக்கி டாக்கி பயன்பாடு இதுவரை முழுமை பெறாமல் உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் எண்ணற்ற அறிவிப்புகள் வெளியாகின. அதில், பல அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாகவே உள்ளன. அதே நிலை தான் தற்போதைய அதிமுக ஆட்சியிலும் தொடர்கிறது.
தேர்தல் வாக்குறுதியிலும், சட்டப் பேரவையிலும் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும் செயல்வடிவம் அளித்ததும், சொன்னதைச் செய்ததுடன், சொல்லாததையும் செய்தது திமுக அரசு மட்டும்தான்.
- திரு. M.K. Stalin திமுக செயல்தலைவர்



ஓட்டுக்கு பணம் என்பதை யார் தொடங்கியது? எந்த ஆண்டில்?
திருமங்கலம் பார்முலா என்பது சரியா? ஜெ பார்முலா என்பது சரியா?

1954 ல் முதல்வராகிறார் காமராஜர். அதன் பின் நடந்த குடியாத்தம் இடைத்தேர்தலில் காங்கிரசால் ஓட்டுக்கு ஒரு ரூபாயும் ஓட்டலில் உப்புமா காபி சாப்பிட டோக்கனும் வழங்கப்பட்டது.
1962 ல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸ் நடேச முதலியார் ஓட்டுக்கு 5 ரூ தந்து வெங்கடாஜலபதி படத்தில் சத்தியம் வாங்குகிறார்.
ஆதாரம்.
MGR 1982 சட்டசபை தேர்தலில் பணம் கொடுத்து வென்றார்
The fledgling party, backed by the Janata Party, was voted to power in the post-Emergency 1977 election. The victory was short-lived. In the subsequent Lok Sabha election his party was routed, and Indira Gandhi, who became Prime Minister again in 1980, dismissed the MGR government together with seven other non-Congress ruled states.
In the following Tamil Nadu Assembly election in 1982, MGR paid cash for votes for the first time and set a bad precedent which has now spread to other states as well
ஆதாரம்

ஜெயலலிதாவின் Cash for Vote
Story 👇

2003 சாத்தான் குளம் இடைத்தேர்தல் அதிமுகவால்
வாக்காளர்களுக்கு சேலை, டி சர்ட், பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது

2005 பிப்ரவரி காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில்
அதிமுகவால் லட்டுக்குள் மூக்குத்தி வைத்து வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது

இதற்கு பிறகு 2009 ல் தான் திருமங்கலம் தேர்தல்.
1954 ல் இருந்து 2008 வரை நடந்த எல்லாவற்றையும் விட்டு விட்டு 2009 திருமங்கலத்தில்தான் ஏதோ பணப்பட்டுவாடா புதிதாக நடந்தது போல் ஏன் கதையளக்கிறார்கள் வஞ்சகர்கள்?
திமுக நடத்தியது ஒரு திருமங்கலம் மட்டுமே அதுவும் அழகிரி பொறுப்பு வகித்ததால்.
அதிமுகவோ 232 திருமங்கலத்தை 2016 இல் நடத்திக்காட்டியதுடன் 3 கண்டைனர்கள் 570 கோடியுடன் பிடிபட்டு பின்னர் மாயமாய் மறைந்ததும் அதிமுக ஆட்சியில்தான்.
Thanks to Mr. Antony Parimalam